Monday, June 9, 2014

அதிரதன் (எ) அதிரத்

தமிழும் இலக்கியமும் இளவரசிகளாய் வலம் வர,
முப்பெரும் தேவியராம்..
    சரஸ்வதியின் அன்பும்,
    லட்சுமியின் பண்பும்,
    ஈசுவரத்தின் தாண்டவமும்,
பத்மநாக விக்னேசனருளும் 
அதீதமாய் ரட்சித்திருக்க!
கறியை உண்டுக் காலனை வென்று,
ரவியினொளி சௌந்தரமாய் ஜெகமெங்கும் 
சிந்துவாய்ப் பாய்ந்தோடி,
குமரனும் நடராசனும் மித்திரர்களாய்ப் 
பன்னீரில் கலந்தாடி!
சென்னியான மசினியின் வேர்களுக்கு,
ஜீவனை வார்த்து!
ரங்கராஜாமனிகளுக்கு மலர்கள் தூவி,
பாரதியின் திலீபமெனும் தீ 
அசோகமாய் வளர்ந்திருக்க,
தர்மமெனும் தங்கராஜனுக்குச் சரணடைந்து,
கனகமும் மல்லியும் குருதியில் கலந்தாடி, 
சூரி போல் கூறிய நெறியோடும், 
வினோதமான அன்போடும், 
தரணி ஆளும் திறனோடும்,
மாசில்லா முத்துக்களான 
மகிழக்குஞ்சுகளை ஈன்றெடுத்த,
மோகனச் செல்விகளும் பிரிய வேலன்களும் 
வசந்தத்தில் மலர்ந்திருக்கும்,
அகரக்குடும்பத்தின் ரத்தினத்திலகமான பிரதீபனே!
என் தங்கைத் தமிழின் மகனே! 
என் மருமகன் அதிரதனே!

எங்கள் குடும்பப் பயணத்தை,
பயணமென்ற குருக்ஷேத்ரத்தைத்
தோள் கொடுத்து நடத்த வந்தவனே!


சோழன், சக்கரவர்த்தி மற்றும் 
திலீபர்கள் உண்டென்றாலும்,
கிழக்கின் மத்தியில் உதித்து, 
எங்கள் சேனைக்கு வலு சேர்க்கப் பிறந்தவனே!

அதிரதன் - பல 
ஆயிரம் பேருடன் 
தனித்தே சமர் செய்பவனாம் -அஸ்திரங்கள் 
பல உடையவனாம் - அதிரடிகள் 
பல புரிபவனாம் - சிறந்த 
தேரோட்டியாம் - மிகச்சிறந்த வழிகாட்டியாம்!

அவசியமான பெயர் தானடா உனக்கு -உன் 
பெயரே வாழ்வின் பாதையாகட்டும் - மேன்மையே 
உன் நோக்கமாகட்டும் - உன் வாழ்வே 
காவியமாகட்டும்!

தேடிப் பகை நித்தம் கொண்டு - பல 
வீண் சொல்லுரைத்து - அகங்கார 
முடி சூடி, பிரித்தாளும் வழி தேடி - வயதோடு 
அனுபவத்தை எட்டித்தள்ளி - அடக்குமுறைக்கும் 
அக்கறைக்கும், அதோடு 
பயத்துக்கும் மரியாதைக்கும்
வேறுபாடு அறியாது - வஞ்சத்தில் 
வீழ்ந்து, பாச நேசம் விடுத்து - தன் 
மெய் நாளையே பொய் என்றறியாமல்
மாயத்தில் உழன்று - வேதனையைப்  
பரிசளிக்கும் இவ்வுலகத் 
துரியோதனன்களை வென்று..

அன்பிற்கே சரண்,
உத்தமர்களுக்கே மித்திரன், 
தர்மத்திற்கே ரதன்,
என்ற கொள்கை சூடி,
அதிரதனாய் உன்னை விதைத்து, 
மகாரதனாய் வாழ்ந்து,
ஜெய பேரிகை முழக்கு,
இவ்வுலகை ஒரு கலக்கு, கலக்கு!

13 comments:

Unknown said...

Anna..a very nice one that includes all your family members...

Manoj said...

vaarthai theriyavillai paraattuvatharku,
aanal ungalidam kattrukolla vendiya innoru kalai edhuvendru therindhu konden mama avargale,
ithilum suyanalam paarungalen ;-).
ungal vaarthai jaalam paraatta thakkathu.

Unknown said...

Adhirathan : Enakku,
neeye Dhronar, neeye krishnan,
neeye naaradharum aavai,
thodarattum un sevai,
tharuvaai enakku oru paaavai.

Endru kaarthirukkum un anbhu marumagan.

"Kizhi pesiyathu thamilil athai ketta angileyanum thamil pesa thavithaan"

Do you remember these lines?

Rombha nalla irukkunna enannu theriyalai Adhirathan ndra per enakku rombha puduchirukku not because of the meaning somehow I attracted by the name intha post pottu nee atha innum athigapaduthitta No thanks na

Ashok said...

Brilliantly written kavithai,
It should have been really difficult to write kavithai like this..

Hatsoff!!!!!!

Vasanth said...

What to say about the blog, it is an extraordinary piece of writing. vaalga tamil, vaalga un tamil.

MANI said...

எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் வார்த்தைகளின் தேர்வு. பெயருடன் விளையாடியது மிக அருமை. உங்கள் திறமைக்கு இது சாதாரணம் தான். இருந்தாலும் உங்களின் பாசத்தை அதிரதன் மீது வெளிப்படுத்த ஒரு அருமையான கவிதையை உதிக்க செய்து எங்களுடன் பகிர்ந்து கொண்டது பாராட்ட தக்கது. தொடரட்டும் உங்கள் படைப்புக்கள். -- அன்புடன் உங்கள் மாமா.

Karikalan said...

Thanks to all for your feedback, appreciation and comments.

vasanth said...

Its an another piece of dedication to our new family member.. This blog will be a perfect reference to Adhirath for understanding the meaning behind his name, same time it will be a good reminder about your love in the family.. Hope he will grown fast to read and understand this blog..

I am happy to see that you are getting time to put your pen down.. I am sure that the readers like me will expect more from you in coming days, and i wish that you could get more time to sweat through your writings.

As a father of Adhirath, I can say that this is a very valuable gift which he can posses with proud...

Thanks...

vasanth said...

Its an another piece of dedication to our new family member.. This blog will be a perfect reference to Adhirath for understanding the meaning behind his name, same time it will be a good reminder about your love in the family.. Hope he will grown fast to read and understand this blog..

I am happy to see that you are getting time to put your pen down.. I am sure that the readers like me will expect more from you in coming days, and i wish that you could get more time to sweat through your writings.

As a father of Adhirath, I can say that this is a very valuable gift which he can posses with proud...

Thanks...

Karikalan said...

Alright, many have asked about whose name in the family were included in this post. Actually, the first paragraph itself covers all the names in the family. Here are the list (I hope I covered everyone). The rest is just a repetitive mention using the Tamil names.

- தமிழும் இலக்கியமும் இளவரசிகளாய் வலம் வர! - Tamil, Elakkiya, Elavarasi
- சரஸ்வதியின் அன்பும்,லட்சுமியின் பண்பும்,ஈசுவரத்தின் தாண்டவமும் - Saraswathi, Lakshmi, Easwari, Easwaran
- பத்ம நாக விக்னேசன் அருளும் - Padmavathi, Nagarajan, Nagendran, Vignesh
- அதீதமாய் ரட்சித்திருக்க! - Adheethi, Rakshith
- கறியை உண்டு, காலனை வென்று - Karikalan
- ரவியின் ஒளி சௌந்தரமாய் ஜெகமெங்கும் சிந்துவாய் பாய்ந்தோடி - Ravichandran, Soundaram, Jagadish, Sindhu
- குமரனும் நடராசனும், மித்திரர்களாய் பன்னீரில் கலந்தாடி - Kumaresan, Natarajan, Mithiran, Panneerselvam
- சென்னியான மசினியின் வேர்களுக்கு, ஜீவனை வார்த்து - Senniappan, Masiniammal, Jeevan
- ரங்க ராஜாமனிகளுக்கு மலர்களை தூவி - Rangasamy, Rajamani, Malarvizhi
- பாரதியின் திலீபம் எனும் தீ அசோகமாய் வளர்ந்திருக்க - Bharathis, Dilip, Stalin, Ashok
- தர்மம் எனும் தங்க ராஜனுக்கு சரணடைந்து - Dharmaraj, Thangaraj, Saranya
- கனகமும் மல்லியும் குருதியில் கலந்தாடி, சூரி போல் கூறிய நெறியோடும் - Kanagaraj, Malleeswari, Suresh
- வினோதமான அன்போடும், தரணி ஆளும் திறனோடும் - Vinothini, Tharani
- மாசில்லா முத்துக்களான, மகிழக்குஞ்சுகளை ஈன்றெடுத்த - Masilamani, Muthulakshmi, Magilan
- மோகன செல்விகளும், பிரிய வேலன்களும், வசந்தத்தில் மலர்ந்திருக்கும் - Mohanapriya, Selvi, Velumani, Thangavelu, Vasanth
- அகரக்குடும்பத்தின் ரத்தினத்திலகமான பிரதீபனே! - Agaran, Rathinam, Thilagam, Pradeep
என் தங்கை தமிழின் மகனே! என் மருமகன், அதிரதனே! - Athirathan

Unknown said...

கறியை உண்ட காலனை வென்ற
அருமை

Shanmuga Sundraram said...

கறியை உண்ட காலனை வென்ற என்ற வரிகளின்அர்த்தம்(காய்கறிகளை உண்டால் காலனை வெல்லலாம்)உங்க பேருக்கே பெருமை சேர்க்குதுங்க மாப்ளே

Vijay said...

Beautiful conceptualizing and creating an art work in Tamizh. I have been planning this, and it so refreshing to see you materialize it. Good job.

சிலர் தமிழை சாதமாய் உண்ண,
சிலர் அதை பிரசாதமாய் அதனை (மற்றவருடன்) பகிர்ந்துகொள்ள,
கரி, ஒரு வரப்பிரசாதமாய் மாற்றி எங்களுக்கு கொடுத்தீர்!!!

அருமை, அபாரம், அற்புதம் !!!

Note: Hopefully this will motivate lot of maamaas/aththais & elders to shower us with Tamizh kavithaigaL. Vaazhga Tamil, VaLarka pallaandu!