யோசித்தேன்,
நீ இல்லையெனில்
என்னாவேன் என்றெண்ணி - என்
உக்கிரத்தை உதறிவிட்டு
மனதளவில் எனை
மன்னிக்கும் முன்
கொஞ்சம் கட்டிக்கொள்,
நீ மன்னிப்பது - என்
மனதுக்குக் கேட்க
வேண்டுமல்லவா - இப்போதைக்கு
முத்தமெல்லாம் வேண்டாம்,
இறுகக் கட்டிக்கொள் போதும்,
கொஞ்சம் மூச்சுத் திணறும்
விலகி விடாதே - பிடியை
விட்டு விடாதே,
முடிந்தால்
இன்னும் இறுக்கிக் கட்டு - உன்
அன்பின் அரவணைப்பில் - என்
ஆணவங்கள் அழியட்டும்,
விலா எலும்புடன் சேர்ந்து
என் வினையெல்லாம்
நொறுங்கட்டும் !
No comments:
Post a Comment