தங்கை அழும்போது தான்
தாரத்தின் வலி
புரிகிறது,
தாரம் அழும்போது தான்
ஆணின் லட்சணம்
தெரிகிறது,
லட்சணம் மறைத்து
லட்சியம் தொலைத்து,
அகந்தை தரித்து
அகத்தைக் குலைத்து,
விதியாடும் விளையாட்டில்
ஆதியினைத் தொலைத்தாடும்
ஆணாதிக்கக் கூட்டமதில்
நான்
மட்டுமென்ன
விதி விலக்கா!