கரத்தினால் தொட்டெழுதி
நெடு நாட்களாகி விட்டது
தமிழில் - ஆனால்
அருமைத்தமிழ் தரமாகவுள்ளது
மனதில்!
எப்படி மறப்பேனென்
தமிழின் சொல் அடி - என்னன்னைத்
தமிழ் கல்மண்
தோன்றாக் காலத்து
மூத்தக்குடி!
அடடே! தமிழ் மீது
அவ்வளவு பற்றோ?
இல்லை - இது பற்றல்ல
பரிசு!
என்னிந்த எண்ண ஓட்டத்தை
முறையாகப் பிரசவிக்க - என்
தாய்மொழி தவிர
வேறு எதை
நான் யோசிக்க !?
தங்களைப்போல் நானும்
நினைப்பதுண்டு - காலச்சவாரி
செய்யவொரு காலக்குதிரை
வேண்டுமென்று!
எதிர்காலம் சுற்றுவதால்
பறி போய்விடும் சுதந்திரம் - இறந்த
காலத்தில் இறக்காத
நினைவுகளைச் சுற்றுவதுதானே
நிரந்தரம்?
அப்படி இறக்காத நினைவுகளில்
தேடியும் கிடைக்கவில்லை - நான்
பிறந்தபோது என் தந்தையின்
உணர்ச்சி எல்லை!
என் தாய்
மறுபிறப்பின் வாயிலில்
இருந்தபோது - அவருள்ளம்
நடுங்கியதா?
என்னை முதலில்
ஏந்திய போது - அவர்
கண்கள் நீர்த் துளிர்த்ததா?
முத்தமிட்ட போது - உடல்
சிலிர்த்ததா?
தொட்டிலிட்ட போது - பாவணை
தடுமாறியதா?
ஒரு கவிதை புனைந்த களிப்பா?
அல்லது
மக்கள் தொகையைக் கூட்டியத் தவிப்பா?
இறக்காத என் நினைவுகளில்
தேடியும் கிடைக்கவில்லை - என்னை
ஈன்ற போதிருந்த என் தந்தையின் உணர்ச்சி எல்லை!
இதை நான் ஒரு
குறையாகக் கருதவில்லை - இருந்தும்
அத்தேடலை நிறுத்த என்னால் இயலவில்லை!
இந்தத் தேடலுக்கு
அமையாதா ஒரு முற்று -
என்றெண்ணி எண்ணிக்
களைத்திருக்கையில் சற்று -
விடையொன்று கொடுத்தது
ஆனி பதினெட்டு -
எங்கள் குடும்பத்தில் உதித்தது
'அகரன்' எனும் மொட்டு -
அவன் வழி என் தந்தையின்
உணர்ச்சி எல்லையை எட்டு!
அவன் பிஞ்சு
விரல்களைத் தீண்டிய அந்த
நிமிடம் - என்
சிரசில் ஏறியிருந்தது
கர்வமெனும்
மகுடம்!
அவன் ஸ்பரிசத்தை
உணர்ந்த அந்தப்
பொழுது - என்
மனதில் துளிர் விட்டது
தந்தை எனும்
விழுது!
அவன் மூச்சுக்காற்று
என்னை உரசிய அந்த
நேரம் - உணர்ச்சி
வெள்ளத்தில் கழுவி
எறியப்பட்டிருந்தது என்
வக்கிரம்!
அவன் பால்
வதனம் நோக்கிய அந்த
நொடி - என்னுடம்பில்
உற்பத்தியான அணுக்கள்
கோடி கோடி!
மகனைப் பெற்றேனா - அல்லது
நான் மறுபடி பிறந்தேனா?
தந்தை ஆனேனா - அல்லது
என் தந்தையை உணர்ந்தேனா?
அளவில்லா உணர்ச்சியில் என் நரம்புகளும்,
சொல்லவொண்ணா வார்த்தைகளில் என் தமிழும்,
கட்டிலடங்கா ஓட்டத்தில் என்னுதிரமும்,
துடிக்க மறந்த இதயமும்,
துடியாய்த் துடித்த என் மனதும்,
நடுக்கத்தைப் போர்த்திய என்னுடலும்,
அதன் சுயநிலை விட்டுக்
கோட்பாடுகளை மீறிய சமயம் - தீர்ந்தது
என் நெடுங்கால ஐயம்!
நான் உதித்த போது
என் தந்தையின்
உணர்ச்சி எல்லை - அறியவில்லை
என்ற பழுது
இனி என் மனதில்
இல்லை!
ஆனி பதினெட்டா
என் தேடலுக்கு முற்று - இல்லையில்லை
இனிதான் ஆரம்பம்
என் வாழ்கையில்
பற்று!
காலக்குதிரையின் சவாரியில்
அமைப்பேன் என்
மகனுடன் கூட்டு -அத்துனையும்
அடைவேன் அவனுடன் வீறு நடை
போட்டு!
என் தந்தையை
உணரவைத்த புதல்வனே - எனக்கு
தந்தையெனும் கர்வத்தை
சூட்டிய முதல்வனே - இன்றும்
என்றும் நீதான் எங்கள்
அகரனே!
நெடு நாட்களாகி விட்டது
தமிழில் - ஆனால்
அருமைத்தமிழ் தரமாகவுள்ளது
மனதில்!
எப்படி மறப்பேனென்
தமிழின் சொல் அடி - என்னன்னைத்
தமிழ் கல்மண்
தோன்றாக் காலத்து
மூத்தக்குடி!
அடடே! தமிழ் மீது
அவ்வளவு பற்றோ?
இல்லை - இது பற்றல்ல
பரிசு!
என்னிந்த எண்ண ஓட்டத்தை
முறையாகப் பிரசவிக்க - என்
தாய்மொழி தவிர
வேறு எதை
நான் யோசிக்க !?
தங்களைப்போல் நானும்
நினைப்பதுண்டு - காலச்சவாரி
செய்யவொரு காலக்குதிரை
வேண்டுமென்று!
எதிர்காலம் சுற்றுவதால்
பறி போய்விடும் சுதந்திரம் - இறந்த
காலத்தில் இறக்காத
நினைவுகளைச் சுற்றுவதுதானே
நிரந்தரம்?
அப்படி இறக்காத நினைவுகளில்
தேடியும் கிடைக்கவில்லை - நான்
பிறந்தபோது என் தந்தையின்
உணர்ச்சி எல்லை!
என் தாய்
மறுபிறப்பின் வாயிலில்
இருந்தபோது - அவருள்ளம்
நடுங்கியதா?
என்னை முதலில்
ஏந்திய போது - அவர்
கண்கள் நீர்த் துளிர்த்ததா?
முத்தமிட்ட போது - உடல்
சிலிர்த்ததா?
தொட்டிலிட்ட போது - பாவணை
தடுமாறியதா?
ஒரு கவிதை புனைந்த களிப்பா?
அல்லது
மக்கள் தொகையைக் கூட்டியத் தவிப்பா?
இறக்காத என் நினைவுகளில்
தேடியும் கிடைக்கவில்லை - என்னை
ஈன்ற போதிருந்த என் தந்தையின் உணர்ச்சி எல்லை!
இதை நான் ஒரு
குறையாகக் கருதவில்லை - இருந்தும்
அத்தேடலை நிறுத்த என்னால் இயலவில்லை!
இந்தத் தேடலுக்கு
அமையாதா ஒரு முற்று -
என்றெண்ணி எண்ணிக்
களைத்திருக்கையில் சற்று -
விடையொன்று கொடுத்தது
ஆனி பதினெட்டு -
எங்கள் குடும்பத்தில் உதித்தது
'அகரன்' எனும் மொட்டு -
அவன் வழி என் தந்தையின்
உணர்ச்சி எல்லையை எட்டு!
அவன் பிஞ்சு
விரல்களைத் தீண்டிய அந்த
நிமிடம் - என்
சிரசில் ஏறியிருந்தது
கர்வமெனும்
மகுடம்!
அவன் ஸ்பரிசத்தை
உணர்ந்த அந்தப்
பொழுது - என்
மனதில் துளிர் விட்டது
தந்தை எனும்
விழுது!
அவன் மூச்சுக்காற்று
என்னை உரசிய அந்த
நேரம் - உணர்ச்சி
வெள்ளத்தில் கழுவி
எறியப்பட்டிருந்தது என்
வக்கிரம்!
அவன் பால்
வதனம் நோக்கிய அந்த
நொடி - என்னுடம்பில்
உற்பத்தியான அணுக்கள்
கோடி கோடி!
மகனைப் பெற்றேனா - அல்லது
நான் மறுபடி பிறந்தேனா?
தந்தை ஆனேனா - அல்லது
என் தந்தையை உணர்ந்தேனா?
அளவில்லா உணர்ச்சியில் என் நரம்புகளும்,
சொல்லவொண்ணா வார்த்தைகளில் என் தமிழும்,
கட்டிலடங்கா ஓட்டத்தில் என்னுதிரமும்,
துடிக்க மறந்த இதயமும்,
துடியாய்த் துடித்த என் மனதும்,
நடுக்கத்தைப் போர்த்திய என்னுடலும்,
அதன் சுயநிலை விட்டுக்
கோட்பாடுகளை மீறிய சமயம் - தீர்ந்தது
என் நெடுங்கால ஐயம்!
நான் உதித்த போது
என் தந்தையின்
உணர்ச்சி எல்லை - அறியவில்லை
என்ற பழுது
இனி என் மனதில்
இல்லை!
ஆனி பதினெட்டா
என் தேடலுக்கு முற்று - இல்லையில்லை
இனிதான் ஆரம்பம்
என் வாழ்கையில்
பற்று!
காலக்குதிரையின் சவாரியில்
அமைப்பேன் என்
மகனுடன் கூட்டு -அத்துனையும்
அடைவேன் அவனுடன் வீறு நடை
போட்டு!
என் தந்தையை
உணரவைத்த புதல்வனே - எனக்கு
தந்தையெனும் கர்வத்தை
சூட்டிய முதல்வனே - இன்றும்
என்றும் நீதான் எங்கள்
அகரனே!
27 comments:
sema, eppadi tha ippadi ellam eluthuregalo. nice feel.
Wow... very sweet anna :)
very nice kavithai anna!!!!!!! your best write up
Straight from your heart. Wonderful and fantastic boss
எதிர்காலம், சுற்றுவதால் பறி போய்விடும் சுதந்திரம்,
இறந்த காலத்தில், இறக்காத நினைவுகளை சுற்றுவதுதானே நிரந்தரம்!
very good thinking, and most expressive
சாகித்திய அகாடெமி கன்பார்ம்
Thanks Jaggu, Gobi, Elakki, Ilavarasi and Chakku.
@Senthil, I am escape.
Thanthai: Karutharikaamal, Prasava vali anubhavikaamal, prasavikkaamal thaimai adaibhavan (Bhakiyasaali).
Ovoru aanukkul oru thaimai olinthullathu enbhathu un eluthilirunthu nangu puriginrathu.
Naan en magalai prasavikkum bothu than en thaiyaiye mulumaiyaga unarnthen, en thanthaikkullirum thaimai, en kanavanulirukkum thaimai (Ovoru pennum unarvaal).
En marumagan "Agaran" moolam en annanukkul irukkum thaimaiyayum unarthivittan...
உங்கள் வாழ்வில் அகரன் என்னும் விழுது முழைத்தது. அந்த விதை பெரும் விருக்க்ஷமாக வளர இந்த மாமன் இப்பூமியில் உள்ள எல்லா சக்தியியையும் வணங்கி வேண்டிக்கொள்கிறேன் .
அகரனுடைய இந்த அவதாரம், உங்களை இன்னும் பலசாலி ஆக்கும். அந்த பலம் தான் அவனுடைய சத்துணவு. அவனுக்கு நீங்கள் எனக்கு சொன்ன தாரக மந்திரத்தை சொல்ல கடமை பட்டுருகிர்றேன். " பெற்றோர்களை வருத்தமுமின்றி பராமரிக்கும் மகனின் வாழ்கை போட்ட்ரப்படும்"
It's really Awesome, you both deserve each other. All the best for holding his hands and teaching him the best in this world.
wow really superb anna...
boss very nice... THANTHAIKUL irrukum THAIMAIYAI nandraga veli paduthi irrukirirgal
தமிழும் உங்களுக்கு வெகு பழக்கம் மாப்ளே. நடை மிகவும் நன்று...
Boss.. Sema..
நன்று வாழ்க தமிழ்
Congrats and God Bless...photos annupu and very very nice and unique name
வாழ்த்துக்கள் Kari...
ஒரு கவிதை புனைந்த களிப்பா? இல்லை மக்கள் தொகையை கூட்டிய தவிப்பா?
UN komedy ki aLaviLLaya pa
நன்று.கல்லணை கட்டியவன் சொல்- அணை கட்டியதிற்கு வாழ்த்துக்கள் .
குடும்பமே கவிக்குடுமபம் /கலைகுடும்பம் தானோ?
மேன்மேலும் தங்கள் அணையிலிருந்து கவிதை திறக்க வாழ்த்துக்கள் .
அகரனுக்கும் வாழ்த்துக்கள்
செங்கோட்டையன் .
Thanks a lot for all your comments and wishes.
@Sengottaiyan bro: Kavi / Kalai kudumbam? ithu konjam over bro :-).
wonderful words my best wishes to my grand son agarankarikalan
anna now only i saw ur blog
its superb anna
always my brother thought was very different again u r rocking
i like this agaran related msg very much
good anna
- malar
Adutha Vairamuthu nega thaa anna sema.... All the words r purely frm ur heart superb.....gud job anna.
Adutha Vairamuthu nega thaa anna sema.... All the words r purely frm ur heart superb.....gud job anna.
Hi Kari buddy,
Hearty Congraz :)
Excellent writing & I can understand your happiness from it.
You rock as always :)
anna....migavum nandraga uladhu........
Amma vaga muthal mura ean kulanthai yai paratha tharunam alavilla santhosham sollamudiyatha unarvu ammanu kathi ya ennai athutha nodiye sirivaitha tharunam ivai anaithum nivugalil oodiyathu oru thanthaiyin unarvai therintha konden padikum poluthu soooooooo nice solla eantha varthagalum eandim illai sooo toching soooo good unga payannoda eathirkalam nandraga ammiya iraivanai vendi kolkiren
Post a Comment