Tuesday, January 21, 2025

நிலவு

குளிராய் இதமாய் 
முழுதாய் முடிவாய்
பிறையாய் பிழையாய்  
மஞ்சலாய் சிவப்பாய் 
மதியாய் யுவதியாய்
மழலைக்குக் கதையாய்
மந்திர ஒளியாய் 
காதலின் துணையாய்
கதிரவனின் நட்பாய்
இரவின் கொடையாய்
இருளின் விளக்காய்
ஒளிந்தும் மறைந்தும்
வளர்ந்தும் தேய்ந்தும்... 
பாசாங்காய்
நிலவு!